Friday, October 5, 2018

தீருவிலில் குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட போராளிகளுக்கு நினைவுத் தூபி அமைக்கும் பணி இடைநிறுத்தம்!

SHARE

வல்வெட்டித்துறை நகரசபையில் ஆளும் தரப்பினரால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தீருவில் பகுதியில் நிர்மானிக்கப்படவிருந்த குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளின் நினைவுத்தூபி அமைக்கும் பணிகளை நிறுத்தக்கோரி ஆரப்பாட்டம் ஒன்று இடம்பெற்றதால் அந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.




குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகள் வீரச்சாவடைந்த இன்றையதினம் இந்த நினைவுத் தூபியை அமைப்பதற்கான அடிக்கல் நடும் பணிகள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் கருணாநந்தராசா ஆகியோர் தலைமையில் முன்னெடுக்கப்படவிருந்தன.

இந்த செற்பாடுகள் இன்று காலை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை வல்வெட்டித்துறை நகரசபையின் எதிர் தரப்பு உறுப்பினர்கள்
உள்ளிட்ட பத்திற்கும் அதிகமானவர்கள் அங்கு வந்து இதை இடைநிறுத்துமாறு கூறி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.




விடுதலைப்புலிகளை மட்டும் நினைவுகூரப்பட்ட இப்பிரதேசத்தில் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் சகல இயக்கங்களையும் நினைவுகூரும் வகையில் இந்த நினைவு தூபியை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக இவர்கள் தெரிவித்து தமது எதிர்ப்பை மேற்கொண்டதுடன் அங்கிருந்த ஏற்பாட்டாளர்களை அங்கிருந்து செல்லுமாறும் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் இரு தரப்பினர்கிற்குமிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்ற நிலையில் அடிக்கல் நடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
















SHARE