Tuesday, October 2, 2018

சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் பஸ் விபத்து!

SHARE

கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் இன்று மதியம் தனியார் பஸ் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழில் இருந்து முழங்காவில் சென்ற தனியார் பஸ்ஸே பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் பஸ்ஸில் பயணித்த பலர் காயமடைந்துள்ளனர்.




மேற்படி வீதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது மாடு ஒன்று குறுக்கே சென்றதாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

விபத்தின் காரணமாக காயங்களுக்குள்ளானவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















SHARE