Tuesday, October 30, 2018

ஐ.தே.க போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு!

SHARE

ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினால் நடத்தப்படவுள்ள போராட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அரச நிறுவனங்களில் நுழைவதனை தடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

போராட்டத்தின் போது எழும் பிரச்சினைகள் தொடர்பாக பொலிஸாரினால் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே பிறப்பித்துள்ளார்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு முறையற்ற விதத்தில் தெரிவு செய்துள்ளமையை கண்டித்தே ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று நடத்தப்படவுள்ளது.

இப்போராட்டத்தில் மோதல்கள் தோன்றுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே பொலிஸார் குறித்த போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் நிறுவனங்களை பாதுகாக்கும் பொருட்டு நீதிமன்றத்தில் இவ்விடயம் தொடர்பில் அறிவித்து அதனை பாதுகாப்பதற்கான அனுமதியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE