Monday, October 22, 2018

விவசாயக் காணியில் மீட்கப்பட்ட கைக்குண்டுகளை அகற்றும் பணியில் கிளிநொச்சி பொலிஸார்!

SHARE

கிளிநொச்சி, அம்பாள்நகர் பிரதேசத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டு அவற்றினை அகற்றும் நடவடிக்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விவசாயம் செய்வதற்காக தான் குடியிருக்கும் காணியில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுத்திகரிப்பில் ஈடுபட்டபோது வெடிக்காத நிலையில் கைக்குண்டுகள் காணப்படுவது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார் குறித்த கைக்குண்டுகளை அகற்ற நீதிமன்றின் அனுமதியைக் கோரியிருந்த நிலையில் தற்போது அதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

இந்நிலையில் குறித்த கைக்குண்டுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ள அதேவேளை குறித்த பகுதியில் வேறு வெடிபொருட்கள் உள்ளவா என்பது தொடர்பிலும் பொலிஸார் நீதிமன்றின் கண்காணிப்பில் சோதனையிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


SHARE