Sunday, October 28, 2018

நாளை அரச பொது விடுமுறையில்லை!

SHARE

நாளை திங்கட்கிழமை அரச பொது விடுமுறை என்று அனுப்பப்படும் குறுந்தகவல் உண்மைக்கு மாறானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக நாளை (29) திங்கட்கிழமை அரச பொது விடுமுறை என்று செய்திச் சேவை ஒன்று குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) ஒன்றை அனுப்பியுள்ளது.

அதுதொடர்பில் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியின் உண்மைத்தன்மையை நிராகரிக்கும் அரச தகவல் திணைக்களம், நாளை எந்தவொரு பொது விடுமுறையும் பிரகடனப்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது.

SHARE