Wednesday, October 3, 2018

தென்மராட்சியை மிரட்டிய வழிப்பறிக் கொள்ளையன் பொலிஸாரிடம் சிக்கினான்!

SHARE

சாவகச்சேரி நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் நீண்டகாலமாக பெண்களின் கைபைகளை பறித்துச் சென்ற வழிப்பறிக் கொள்ளையர் கைது செய்யப்பட்டார் என்று சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

தச்சன் தொப்பு பகுதியில் வசித்தவரும் 23 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவரே சாவகச்சேரி பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.




சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு, 19 ஆயிரம் ரூபா பணம் கைபேசி, 18 கைப்பைகள் 4 வங்கிப்புத்தகங்கள் தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப்பத்திரம் என்பன அவருடைய வீட்டிலிருந்து மீட்க்கப்பட்டுள்ளன.

அண்மையில் சாவகச்சேரி நகர சபையின் பெண் உறுப்பினரின் கைப்பையைப் பறித்துச் சென்றவரும் இந்தச் சந்தேகநபரே என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.




சாவகச்சேரி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விக்கிரமசிங்கே,குற்றப்பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் ஏ.பி.விஜயகோன்,உப பொலிஸ் பரிசோதகர் இந்து பிரதீபன்,மாவட்ட புலனாய்வுக் குழு பொறுப்பதிகாரி ஆர்.பிரதீப், மற்றும் நா.விஜிதரன் பொலிஸ் காண்டபிள் நிசாந்த, பண்டார,ரத்னாயக்க,சுரேஷ், புவனச்சந்திரன், நவரத்தினம்,தினேஷ், ரங்க, ஆகியோர் அடங்கிய குழு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரிடம் இருந்த பொருள்களை மீட்டனர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.






SHARE