Wednesday, October 31, 2018

சபாநாயகரை சந்தித்தனர் வெளிநாட்டு இராஜதந்திரிகள்!

SHARE

வெளிநாட்டு இராஜதந்திரிகள் குழுவொன்றிற்கும் சபாநாயகர் கருஜெயசூரியவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆராய்வதற்காகவே வெளிநாட்டு இராஜதந்திரிகள் சபாநாயகரை சந்தித்துள்ளனர்.

ஐநா ஐரோப்பிய  ஒன்றியம் பிரிட்டன் கனடா ஜேர்மனி ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகளே  சபாநாயகரை சந்தித்துள்ளனர்.

இலங்கையின் சிவில் சமூகத்தினரையும் சபாநாயகர் சந்தித்துள்ளார்

இரு சந்திப்புகளின் போதும்  பாராளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறித்து கவலை வெளியிடப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டி ஜனநாயகத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து கவலை வெளியிட்டுள்ள தூதுவர்கள்  தற்போதைய நிலை காரணமாக இலங்கை குறித்து சர்வதேச அளவில் எதிர்மறையான எண்ணம் உருவாகலாம் என எச்சரித்துள்ளனர்

இதேவேளை தூதுவர்களை உடனடியாக இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எதனையும் எடுக்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள சபாநாயகர் நான் இன்று மாலை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளேன் என  குறிப்பிட்டுள்ளார்.
SHARE