Sunday, October 14, 2018

யாழில் வாள் ஒன்றுடன் இளைஞர் கைது!

SHARE

யாழ்ப்பாணம், உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் வாள் ஒன்றுடன் இளைஞரொருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடுவிலிலுள்ள வீடொன்றில் வாள் வைத்திருப்பதாக யாழ். பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்று அமைவாக குறித்த கைது இடம்பெற்றுள்ளது.




இதற்கமைய இன்று அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்புச் சோதனை நடவடிக்கையின் போது வாள் ஒன்றையும் அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞரொருவரையும் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரையும் கைப்பற்றப்பட்ட வாளையும் சுன்னாகப் பொலிஸாரிடம் அதிரடிப் படையினர் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
SHARE