Friday, October 26, 2018

விரைவில் அமைச்சரவை மாற்றம் – மஹிந்தானந்த

SHARE
இலங்கையின் புதிய அமைச்சரவை மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக பெரும்பாலும் நாளை அறிவிக்கப்படும் என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

”இவ்வாறான ஒரு நாளை நாம் மட்டுமல்ல, முழு நாட்டு மக்களும் இதனையே எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காரணம் இன்னும் சில காலத்திற்கு இந்த அரசாங்கம் தொடர்ந்திருந்தால் நாட்டில் எதுவுமே எஞ்சியிருக்காது.

நாட்டின் பொருளாதாரம் பாதாளத்திற்குச் சென்றுள்ளது. அரச சொத்துக்களை வெளிநாடுகளுக்;கு விற்று நாட்டை எதுவுமற்றதாக ஆக்கிவிட்டனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் ஜனாதிபதியை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டமை மிகவும் பாராதூரமானது. இத்தனை காலமும் நாட்டிற்கு துரதிஸ்டம் பீடித்திருந்தது.

இனி நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்வது எமது கடமை. புதிய அமைச்சரவை மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக விடயங்களை அநேகமாக நாளைய தினம் அறிவிப்போம்.

இல்லாவிட்டால் எதிர்வரும் நாட்களில் அறிவிப்போம். நாட்டு மக்கள் இச்சந்தர்ப்பத்தில் சமாதானமான முறையில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்” என்றார்
SHARE