Sunday, October 28, 2018

யாழ். சிறையில் கைதி தற்கொலை முயற்சி.!

SHARE

யாழ். சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கைதி ராஜேஸ்வரன் கஜன் என்ற இளைஞரே மலசல கூடத்திற்குள் தூக்கு போடுவதற்கு முயற்சித்துள்ளார்.

எனினும் அங்கிருந்த ஏனைய கைதிகளாலும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களாலும் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக யாழ். போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE