Monday, October 15, 2018

யாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.!

SHARE


ஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.




குடும்பப் பெண்ணின் மகன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் மூவர் விரைவில் கைது செய்யப்படுவர் என்றும் பொலிஸார் கூறினர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் குடும்பப்பெண் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

வீட்டுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்தக் கொலையைச் செய்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் சந்திரராசா விஜயகுமாரி (வயது-58) என்ற குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டார். அவரது மகன் காயமடைந்தார்.
SHARE