Monday, October 29, 2018

நீதிப்பொறிமுறையிலிருந்து இலங்கை விலகக் கூடாது: கனடா

SHARE

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென கனடா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கைக்காக கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினொன் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை கனடா உன்னிப்பாக அவதானித்து வருகின்றதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் நாட்டின் சட்டம் மற்றும் அரசியலமைப்பை மதித்து செயற்படுவதோடு, வன்முறைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, பொறுப்புக்கூறல் செயற்பாட்டிலிருந்து இலங்கை விலகக் கூடாதென்றும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை செயற்படுத்துவது அவசியமென்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்துள்ளார்.
SHARE