Saturday, October 27, 2018

வவுனியாவில் மஹிந்தவுக்கு வெற்றிக்கொண்டாட்டம்!

SHARE
நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுக்கொண்டமைக்கு வவுனியாவில் அவரின் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி வெற்றிக்கொண்டாட்டத்தில் இன்று (சனிக்கிழமை) ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள கொப்பேக்கடுவா நினைவுச் சிலையருகில் இந்த வெற்றிக்கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் தர்மபாலா செனவிரத்தினா தலைமையில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, கொப்பேக்கடுவா சிலைக்கு மலர் மாலை அணிவித்து பட்டாசுகள் கொழுத்தி சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த வெற்றிக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபச்வை வாழ்த்தி கோஷமிட்டமையும் குறிப்பிடத்தக்கது.


SHARE