Friday, October 26, 2018

கொழும்பு அரசியலில் திடீர் பரபரப்பு – அரசிலிருந்து விலகுவதாக மைத்திரியின் கட்சி அறிவிப்பு

SHARE

நல்லாட்சி அரசிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகுவதாக சபாநாயகர் கரு ஜயசூர்யவுக்கு அறிவித்துள்ளதாக முன்னணியின் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து முன்னெடுக்கும் நல்லாட்சி அரசிலிருந்து விலகுவதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது

வரவு – செலவுத் திட்டம் அடுத்த மாதம் முற்பகுதியில் நாடாளுமன்றுக்கு வரவுள்ள நிலையில் ஐக்கியஙமக்கள் சுதந்திர முன்னணி இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SHARE