Sunday, October 28, 2018

பெற்றொலிய கூட்டுத்தாபன அலுவலகத்துக்கு அர்ஜுன சென்றதால் பதற்றம் – துப்பாக்கிச்சூடு – இருவர் படுகாயம்!

SHARE

தெமட்டகொடையில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

பெற்றோலியக் வளத்துறை அமைச்சராக இருந்த அர்ஜுன ரணத்துங்க குறித்த பகுதிக்கு சென்ற வேளையில் அங்கு பதற்ற நிலை நிலவியது.

இதனையடுத்து அவரது மெய் பாதுகாவலர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இருவர் காயமடைந்த  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குறித்த மெய்பாதுகாவலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE