Wednesday, October 3, 2018

யாழ்.சின்னக்கடை பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை: ஒருவர் மடக்கிப் பிடிப்பு!

SHARE

யாழ்.சின்னக்கடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்த நபரை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் இணைந்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று (புதன் கிழமை) மதுவொழிப்பு தினம் என்பதால், யாழில் உள்ள அனைத்து மதுபான சாலைகள் மூடபப்ட்டுள்ளன.

இந்நிலையில் , யாழ்.சின்னக்கடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களான வை.கிருபாகரன் , ஜெ. ரஜிவ்காந், ஜெனன் மற்றும் ம.மயூரன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.




அதனை அடுத்து உறுப்பினர்கள், சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்க படுவதாக கூறப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது மாநகர சபையின் வரி அறவிட்டு உத்தியோகஸ்தர்களும் உடன் இருந்துள்ளனர்.

அதன் பின்னர் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற நபரை பிடித்ததுடன் அவரிடம் இருந்து 250 மில்லி லீட்டர் கொள்வனவு உடைய 13 சாராய போத்தல்களையும் மீட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சாராய போத்தல்களையும் பிடிபட்ட நபரையும் யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.






SHARE