Wednesday, October 10, 2018

சர்கார் டீசர் ரிலீஸ் திகதி அறிவிப்பு!

SHARE
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் "சர்கார்". துப்பாக்கி மற்றும் கத்தி திரைப்படங்களைத் தொடர்ந்து 3-ஆவது முறையாக விஜய், முருகதாஸ் கூட்டணி இதில் இணைந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.




இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் - விஜய் கூட்டணி 4-ஆவது முறையாக சர்கார் படத்தில் இணைந்துள்ளது. இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் அக்டோபர் 19-ஆம் திகதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. 

SHARE