Wednesday, October 31, 2018

வன்முறைகளை தவிர்க்குமாறு இலங்கைக்கு அவுஸ்ரேலியா வலியுறுத்து!

SHARE

நாட்டில் அரசியல் அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்வதற்கு மோதல் மற்றும் வன்முறை செயற்பாடுகளிலிருந்து விலகி நிற்குமாறு அவுஸ்ரேலியா இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, நீண்டகால நண்பர் என்ற அடிப்படையில் இலங்கையின் அரசியல் அபிவிருத்திகள் குறித்து அவுஸ்ரேலியா மிகுந்த கரிசனை கொண்டிருப்பதாகவும் அவுஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

புதிய பிரதமர் நியமனத்தை தொடர்ந்து இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இவ்வாறான பிரச்சினைகள் நாடாளுமன்றம் மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே தீர்க்கப்பட வேண்டும்.

அதற்கமைய இலங்கை மக்களின் ஜனநாயக ஆணைக்கு அனைத்து தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, அரசியல் முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு மோதல்கள் மற்றும் வன்முறைகளிலிருந்து விலகி நிற்குமாறும் அவர் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.
SHARE