Saturday, October 6, 2018

அரசியலாக்கப்படும் ‘பேட்ட’!

SHARE

ரஜினிகாந்த் நடிக்கும் 'பேட்ட' படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் கவனம்பெற்றது. இந்த நிலையில் இதன் புதிய போஸ்டர் நேற்று (அக்டோபர் 4) வெளியிடப்பட்டுள்ளது.

வேட்டி அணிந்து வித்தியாசமான மீசையுடன் அதில் தோன்றியுள்ளார் ரஜினி. சமூக வலைதளங்களில் இந்தப் போஸ்டர் கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக ரஜினியின் இந்த லுக்கானது அஜித் நடித்த ‘வீரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போல உள்ளதாகவும் ரஜினியின் மீசை ‘சிங்கம்’ பட சூர்யாவைக் கண்முன் நிறுத்துவதாகவும் கூறிவருகின்றனர்.

இவை இப்படியிருக்க இன்னும் சிலரோ இதை அரசியல் கண்ணோட்டத்தில் அணுகுவதையும் பார்க்க முடிகிறது. காரணம், போஸ்டரில் ரஜினிக்குப் பின்புறம் உள்ள சூரியன். இப்படியாகப் பலவாறான கோணங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது இந்த போஸ்டர்.
SHARE