Thursday, October 4, 2018

இலைவகை, மரக்கறிகளை இரவில் உண்ணலாமா?

SHARE
இலைவகை மரக்கறிவகைகளை இரவு உணவில் சேர்த்துக் கொள்வது பாதுகாப்பானதா? இலைவகைகளை இரவு உணவில் சேர்த்துக் கொள்வதால் தீயவிளைவுகள் ஏற்படும் என்ற ஒரு பரவலான அபிப்பிராயம் நிலவுகிறது. இது சம்பந்தமான உண்மை நிலையைத் தெளிவு படுத்துவீர்களா?




மூன்று நேர உணவிலும் இலை வகைகள், மரக்கறி வகைகளைச் சேர்த்துக் கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இரவு வேளைகளில் இலைக் கறிவகைகளை உண்பது ஆபத்தானது என்ற அபிப்பிராயம் ஒரு மூடநம்பிக்கை ஆகும். இதில் எந்தவித உண்மையும் இல்லை. ஆனால் உணவு உண்டவுடன் உறங்கச் செல்வது ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல.

இரவில் எந்த வகையான உணவை உண்டாலும் 1-2 மணி நேரத்துக்குப் பின்பு படுக்கைக்குச் செல்வது நல்லது.
3 நேர உணவிலும் இலைக்கறி வகைகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடல் நோய்கள் ,இருதய நோய்கள் நீரிழிவு, உடல் நிறை அதிகரிப்பு போன்ற பலபல சுகாதார பிரச்சினைகளில் இருந்து நாம் பாதுகாப்புப் பெற்றுக்கொள்ள முடியும்.




மரக்கறி இலைவகைகளைத் தெரிவு செய்யும்பொழுது மருந்து தெளிக்கப்படாத மரக்கறி வகைகளைத் தெரிவு செய்து உண்பது நல்லது

உதாரணமாக அகத்தி, சண்டி, முருங்கையிலை, வல்லாரை, தவசிமுருங்கை, வாழைப்பொத்தி, கறிவேப்பிலை போன்ற மரக்கறி வகைகளுக்குப் பொதுவாக மருந்து விசிறப்படுவதில்லை.
SHARE