Monday, October 22, 2018

பொலிஸாரின் அசமந்தபோக்கை கண்டித்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் போராட்டம்!

SHARE

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில், பொலிஸார் அசமந்தபோக்குடன் செயற்பட்டு வருவதாக கூறி பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத் தொகுதியை ஆக்கிரமித்து பல்கலைக்கழகத்தின் நிர்வாக செயற்பாட்டிற்கு தடையாக இருந்துவரும் மாணவர்களுக்கெதிராக பல்வேறுபட்ட சட்ட நடவடிக்கைகள், பல்கலைக்கழக நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸார் அசமந்தமாக இருந்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், கல்விசார், கல்விசாரா ஊழியர்கள், உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக நிருவாக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் மற்றும் பொறியியல் பீடங்களைச் சேர்ந்த மாணவர்களை வெளியேற்றியதைக் கண்டித்தும், அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை நீக்குமாறு கோரியும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பல்கலைக் கழகத்தின் நிர்வாகக் கட்டடத் தொகுதியை ஆக்கிரமித்து கடந்த 12 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


SHARE