Sunday, October 28, 2018

ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணை – கையொப்பம் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்தது ஐ.தே.க

SHARE

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணையைக் கொண்டு வரும் நடவடிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பித்தது. குற்ற விசாரணைப் பிரேரணைக்கான கையொப்பம் பெறும் நடவடிக்கை சற்று முன்னர் ஆரம்பமாகியது.

ரணில் விக்ரமசிங்கவை முறையற்ற வகையில் பதவிநீக்கம் செய்து, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடும், சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவிசாரணைப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவது தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில் அந்தப் பிரேரணையில் இன்று கையொப்பம் பெறும் நடவடிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்பித்துள்ளனர். எனினும் நாடாளுமன்றம் வரும் 16ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டமையால் அதுவரை பிரேரணையை சமர்ப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE