Tuesday, October 9, 2018

நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்!

SHARE

நவராத்திரி விரதம் இன்று ஆரம்பமாகின்றது.

இன்று தொடக்கம் எதிர்வரும் ஒன்பது நாட்கள் இந்துக்கள் சக்தியை வழிபடுவார்கள். பத்தாம் நாள் விஜயதசமியாகும்.

முதல் மூன்று நாட்களும் வீரத்தின் தெய்வமான துர்க்கா தேவியையும் அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தின் அதிபதியான லக்ஷ்மி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் கல்வியின் தெய்வமான சரஸ்வதி தேவியையும் நினைத்து விரதம் இருந்து வழிபடுவது இந்துக்களின் வழக்கமாகும்.




எதிர்வரும் 19ஆம் திகதி விஜயதசமியாகும். விஜயதசமி அன்று ஏடு தொடங்குதல் முதலான நற்காரியங்களில் இந்துக்கள் ஈடுபடுவார்கள்.


அன்றைய தினம் கேதார கௌரி விரதத்தின் தொடக்க நாளாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE