Wednesday, October 31, 2018

அனுமதியின்றி அலரிமாளிகைக்குள் நுழைந்த இருவரால் பரபரப்பு

SHARE

அலரிமாளிகைக்குள் இனந்தெரியாத இருவர் நுழைந்ததன் காரணமாக பரபரப்பான நிலையேற்பட்டது என ரணில் விக்கிரமசிங்கவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இருவர் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் அலரிமாளிகைக்குள் நுழைந்ததுடன் அலரிமாளிகைக்குள் இருந்த பொருட்கள் சிலவற்றை அங்கிருந்து அகற்ற முயன்றனர் அவ்வேளை   ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்களை அவர்களை தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர் எனவும் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அலரிமாளிகைக்குள் அனுமதியின்றி நுழைந்த இருவரும் அலரிமாளிகையில் உள்ள பொருட்கள் குறித்த விபரங்களை சேகரிப்பதற்காக  மகிந்த ராஜபக்ச அலுவலகமே தங்களை அனுப்பியதாக தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் அவர்கள் இருவரும் அலரிமாளிகையிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றபட்டனர் என ரணில்விக்கிரமசிங்கவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை அலரிமாளிகைக்கு சென்ற அரசாங்க உத்தியோகத்தர்கள் இருவர் அவர்களின் கடமைகளை மேற்கொள்ள விடாமல் தடுக்கப்பட்டமை மற்றும் அச்சுறுத்தப்பட்டமை குறித்து பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்சவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
SHARE