Saturday, October 27, 2018

ரணிலுடன் சீனத் தூதுவர் சந்திப்பு!

SHARE

இலங்கைக்கான சீனத் தூதுவர் cheng xueyua, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பிரதமர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நேற்று நீக்கப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றிருந்தார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்கவுடனான இச்சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் சீனத் தூதுவர் cheng xueyua சந்திப்பினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE