Friday, October 12, 2018

யாழில் மீட்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பில் நேரில் சென்று நீதிபதி ஆராய்வு!

SHARE

யாழ். அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் தொடர்பாக மல்லாகம் நீதிவான் சம்பவ இடத்திற்கு சென்று இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணை மேற்கொண்டுள்ளார்.

மல்லாகம் நீதிவான் ஏ.ஆனந்தராஜாவும் சட்ட வைத்திய அதிகாரி மயூரதனும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

அச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் வீதியில் மின்சார கம்பம் நடுவதற்காக நிலத்தை தோண்டிய போது அந்த கிடங்கிலிருந்து இவ் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.




இதன்படி இன்று மேலும் தோண்டப்பட்ட போது மேலதிகமாகவும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன. இதன்போது கால், கை, விரல் மற்றும் மண்டையோடு பகுதி மீட்கப்பட்டிருந்து.

இதனையடுத்து அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்படதைத் தொடர்ந்து அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான ஆய்விகளை மேற்கொள்வதற்காக அவை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுள்ளன.




மேலும் மின்சார கம்பம் நாட்டும் பணியினை தொடர்ந்து மேற்கொள்ளவும் நீதிவான் அனுமதியளித்தார். அத்துடன் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





SHARE