Sunday, October 28, 2018

தெமட்டக்கொட துப்பாக்கி சூடு: பாதுகாப்பாக மீட்கப்பட்டார் அர்ஜூன ரணதுங்க!

SHARE

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தினால் உள்ளே அகப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பாதுகாப்பாக அதிரடிப்படையினால் மீட்கப்பட்டு அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெமட்டக்கொடயில் உள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குள் செல்ல முயன்ற சந்தர்ப்பத்தில் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தடுத்ததால் அப்பகுதியில் பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளது.

இதன்போது முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே இருவர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அங்கிருந்து முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பாதுகாப்பாக அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.












SHARE