Monday, October 15, 2018

குளவித் தாக்குதலுக்குள்ளான சிறுவன் – பாட்டி உயிரிழப்பு!

SHARE

தெனியாய பிரதேசத்தில் குளவித் தாக்குதலுக்குள்ளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி மற்றும் சிறுவன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

தெனியாய, கிரிவெல்தொல இங்குருஹேன பிரதேசத்தில் வசிக்கும் 2 வயதுடைய இந்தூச தரிந்து மற்றும் அவரது பாட்டியாகிய 69 வயதுடைய கருணாவதி வன்னியாராச்சி ஆகியோரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.




இச்சம்பவத்தின் போது 2 வயது ஆண் குழந்தை ஒன்றும் அவரது பாட்டியும் வீட்டில் இருந்த போது வீட்டின் இரண்டாவது மாடியின் கூரையில் இருந்த குளவிக் கூடொன்று கலைந்து சரமாரியாக குழந்தையையும் பாட்டியையும் தாக்கியுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரையும் தெனியாய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோதும் சிறுவனும் அவனது பாட்டியும் உயிரிழந்துள்ளனர்.




உயிரிழந்தவர்களின் சடலம் தெனியாய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தெனியாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



SHARE