Monday, October 29, 2018

அர்ஜூன ரணதுங்க கைது!

SHARE

பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடையில் அமைந்துள்ள  பெற்றோலிய கூட்டுத்தாபணத்தின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாகவே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்கவை நீதி மன்றில் ஆஜர்படுத்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நேற்று தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் மூவர் படுகாயங்களுக்கள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
SHARE