Friday, October 26, 2018

பதவி விலகப்போவதில்லை- ரணில்

SHARE

பாராளுமன்ற மரபுகளுக்கு அமையவும் அரசியலமைப்பு ரீதியாகவும் தாமே தொடர்ந்தும் பிரதமராகவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தமக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் தொடர்ந்தும் பிரதமர் பதவியில் நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பிற்கு அமைவாக தம்மை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாக இருந்தால் பாராளுமன்றத்தில் தமக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிதாக எவரேனும் பதவியேற்க வேண்டுமெனில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமெனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அலரி மாளிகையில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.
SHARE