Thursday, November 29, 2018

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த பஸ் ஆற்றில் பாய்ந்தது – நால்வர் உயிரிழப்பு -23 பேர் படுகாயம்!

SHARE


யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று நாத்தன்டிய பகுதியில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர். 23இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து இன்று முற்பகல் 10 மணிக்கு சேவையை ஆரம்பித்த பேருந்தே இந்த விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் உயிர்ழந்தவர்களுள் 3 பெண்களும் அடங்குகின்றனர். அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை அடுத்து ஆற்றில் பாய்ந்த பேருந்து பொலிஸாரின் நடவடிக்கையால் மீட்கப்பட்டதுடன், படுகாயமடைந்தவர்கள் காயமடைந்தவர்கள் மாரவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.






SHARE