Sunday, November 18, 2018

நாடாளுமன்றில் மூன்று நாள்களில் 8 கோடி ரூபா செலவு!

SHARE

நாடாளுமன்றில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலமையில், கடந்த மூன்று நாள்கள் அமர்வுகளுக்கும் சுமார் எட்டுக் கோடி ரூபா பணம் செலவு செய்யப்பட்டுள்ளது என்று பப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஒரு நாளைக்கு ஏற்படும் செலவு 2 கோடி 53 லட்சம் ரூபா. கடந்த வருடத்தில் 95 சபை அமர்வுகள் நடாத்தப்பட்டுள்ளன. இதற்காக ரூபா 245 கோடிக்கும் அதிகமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
SHARE