Thursday, November 1, 2018

மட்டக்களப்பில் இளம் ஆசிரியர் தற்கொலை!

SHARE

மட்டக்களப்பு பெரிய கல்லாறு பிரதேசத்தில் இளம் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்;துள்ளனர்.

உயிரிழந்தவர் புசல்லாவை பகுதி பாடசாலையொன்றில் ஆசிரியராக கடமையாற்றிவரும் பெரியகல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.

நிதி பிரச்சினை காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE