“இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவதன் மூலம் உண்மையான ஜனநாயகம் வெற்றி பெறட்டும்” என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்ததன் பின்னர் நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு டுவிட்டியுள்ளார்.
நாமல் மேலும் தனது டுவிட்டில்,
“பாராளுமன்றை கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான செயலைச் செய்துள்ளார்.
இப்போது மக்கள் தெரிவிக்கட்டும். அதைத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள்” என டுவிட்டியுள்ளார்.