Friday, November 2, 2018

மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்த ஐ.தே.க

SHARE

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி இன்று சபாநாயகரிடம் கையளித்தது.

பிரதமர் வெற்றிடம் காணப்படாத நிலையில் அரசியலமைப்புக்கு முரணாக பிரதமர் பதவியேற்றமை தொடர்பிலேயே மகிந்த ராஜபக்ச மீது நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வந்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியமைக்கான 2094/43இலக்க வர்த்தமானி அறிவிப்பு மற்றும் அமைச்சரவையைக் கலைத்தமை தொடர்பான 2094/43A இலக்க வர்த்தமானி அறிவிப்பு மற்றும் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்தமைக்கான 2094/44 இலக்க வர்த்தமானி அறிவிப்புகள் 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி சட்டத்து முரணாக வெளியிடப்பட்டுள்ளன என்று நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பி்டப்பட்டுள்ளது.


SHARE