பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பினர் தற்போது தங்களின் பெரும்பான்மை பலத்தினை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமையவே பாராளுமன்றத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் எவ்வித பிரச்சினைகளும் தோற்றம் பெற்றிருக்காது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பேச்சாளர் வசந்த பண்டார தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காகவே பாராளுமன்றத்தினை கலைத்தார்.ஆனால் சபாநாயகர் நெருக்கடிகளை தீவிரப்படுத்த பாராளுமன்றத்தை தொடர்ந்து கூட்டி வருகின்றார் எனவும் தெரிவித்தார்.