Sunday, November 11, 2018

அலரி மாளிகையிலேயே ரணில் தொடர்ந்தும் தங்கியிருப்பார் – ஐக்கிய தேசிய கட்சி!

SHARE

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையிலேயே ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தங்கியிருப்பார் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும், ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் நேற்று(சனிக்கிழமை) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையின் பிரதமர் தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவே. இதன் காரணமாக பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையிலேயே ரணில் விக்ரமசிங்க தங்கியிருப்பார்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானதாகும். இதன்காரணமாக இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்“ என தெரிவித்துள்ளார்.
SHARE