Saturday, November 24, 2018

மஹிந்தவின் ஆட்சியால் அச்சத்தில் மக்கள்: மங்கள

SHARE

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி, மக்களிடத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும் ஆட்சியென முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் சர்ச்சை தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார், மேலும் கூறியுள்ளதாவது,

“மஹிந்த இலங்கையை 10 வருடங்கள் ஆட்சி செய்த காலத்தில் அவர் அச்சத்தின் குறியீடாகவே திகழ்ந்தார். மேலும் கடந்த மூன்று வாரங்களில் நாடு முழுவதும்  மீண்டும் அச்ச உணர்வை மஹிந்த ஏற்படுத்தியுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற அமர்வில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் மிகவும் தவறான முறையில் செயற்பட்டதை அனைத்து மக்களும் அவதானித்திருப்பார்கள்.

இந்நிலையில் நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ கடமைகளை பொறுப்பேற்றால் மக்கள் சுதந்திரம் பறிபோகிய நிலையில் அச்சத்துடன் கூடிய சூழ்நிலையில் வாழவேண்டி ஏற்படும் என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள்” என மங்கள சமரவீர சனல் 4 தொலைக்காட்சியின் நேர்காணலில் கூறியுள்ளார்.

இதேவேளை, பெரும்பான்மையை மஹிந்த நிரூபித்தால் அலரிமாளிகையை அவர் பெறமுடியுமென முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
SHARE