Friday, November 16, 2018

நாடாளுமன்றத்திற்காக உயிரையும் கொடுப்பேன் – சபாநாயகர்!

SHARE

நாடாளுமன்றத்திற்காக உயிரையும் கொடுக்க தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழப்பநிலையினைத் தொடர்ந்து சபை அமர்வுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொண்டு நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டை நேசிக்கும் அனைத்து இன மக்களும் பொறுப்புணர்வுடனும் அமைதியாகவும் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
SHARE