Friday, November 16, 2018

அடுத்த பிரதமர் யார் ? ; இன்று கூடுகிறது பாராளுமன்றம்!

SHARE

பாராளுமன்ற அமர்வில் நேற்றையதினம் இடம்பெற்ற அமளிதுமளியையடுத்து பாராளுமன்ற கட்டத்தொகுதியில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கூடவுள்ளது.

பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளித்தகட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்­திப்­பின்­போதே   இன்­றைய தினம் மீண்டும் பெரும்­பான்மை பலம்  தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில்  நம்­பிக்கை  வாக்­கெ­டுப்பை நடத்­து­வ­தற்கு  இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.

அதா­வது ஏற்­க­னவே மக்கள் விடு­தலை முன்­ன­ணியால் சமர்ப்­பிக்­கப்­பட்ட  நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை திருத்தி மீண்டும் பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­க­ளுக்கு அமை­வாக  வாக்­கெ­டுப்­புக்கு விடு­மாறும்   அது நிறை­வேற்­றப்­பட்டால் அதனை தான் பரி­சீ­லிப்­ப­தா­கவும் அது தொடர்பில் அர­சி­ய­ல­மைப்­புக்கு உட்­பட்டு செயற்­ப­டு­வ­தா­கவும்   ஜனா­தி­பதி இந்த சந்­திப்பில் குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும் இதன்­போது நாட்டில் தற்­போது நிலவும்  அர­சியல் நெருக்­க­டிக்கு சில தினங்­களில்  தீர்­வு­கா­ணப்­படும் என்றும் பெரும்­பான்மை  பலம் உள்ள தரப்­புக்கு   அர­சாங்கம் அமைக்க தான் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தா­கவும் ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.  

இந்த சந்திப்பில் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளித்த கட்­சி­களின் பிர­தி­நி­திகள் இந்த சந்­திப்பில் பங்­கேற்­றனர்.

அத்துடன் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய  மற்றும்   ஐக்­கிய தேசிய கட்­சியின்   சார்பில்  அகில விராஜ் காரி­ய­வசம், கபீர் ஹஷீம் லக்ஷ்மன் கிரி­யெல்ல  ரவி கரு­ணா­நா­யக்க  தலதா அத்­து­கோ­ரளை எரான் விக்­ர­ம­ரட்ன   தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் முஸ்லிம் காங்­கிரஸ்  தலைவர் ரவூப் ஹக்கீம்  தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பி.திகாம்பரம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின்  தலைவர் ரிஷாத் பதி­யுதீன், ராஜித்த சேனா­ரட்ன சம்­பிக்க ரண­வக்க ஆகி­யோரும்  இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.
SHARE