Monday, November 26, 2018

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான யாழ்ப்பாண மாநகர முதல்வரின் பொது அழைப்பு!

SHARE

தமிழ் இனத்தின் விடுதலைக்காக, தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் “மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு” கடந்த காலங்களில் நடைபெற்றது போன்று இம் முறையும் பாசையூர் கடற்கறை முன்றலில் நடாத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமது இன்னுயிர்களை நாம் கனவு கண்ட தமிழ் தேசியத்திற்காக ஆகுதியாக்கிய எம் மானமா வீரர்களை நினைவுகூரும் நிகழ்வு கார்த்திகை 27 ஆம் நாள் நாளை (2018.11.27) 6.00 மணியளவில் பாசையூர் கடற்கரை முன்றலில் வழமை போன்று இடம்பெறும். 

எனவே மாவீரர்களை எம் தேசத்திற்களித்த மாவீரர் குடும்பங்கள் மற்றும் மாவீரர்களது உறவுகளையும், எமது மண்ணுக்காக போராடிய வீர மரவர்களையும் குறித்த நிகழ்வில் தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசனங்களில் மாலை 5.00 மணிக்கு வருகை தந்து அமர்ந்து கொண்டு நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளுமாறும், இவர்களுடன் தமிழ் தேசியத்தின் பற்றாளர்களையும், தமிழ் பேசும் உறவுகளையும் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.

எமது தியாகப் போராட்டத்தில் எம் விடுதலைக்காக தமது உயிரகளை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வில் ஒவ்வொரு தமிழ்  பேசும் உணர்வாளனும் தவறாது கலந்து கொண்டு நினைவு கூர்வதுடன், மாவீரர்களை எமக்களித்த குடும்பத்தின் நல் வாழ்வுக்காகவும் பிரார்த்திப்போமாக.

“காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை
கல்லறையல்ல உயிருள்ளவர் பாசறை”

இவ்வண்ணம்,
இம்மானுவல் ஆனல்ட்
யாழ் மாநகர முதல்வர்
SHARE