Thursday, November 15, 2018

இலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா நம்பிக்கை

SHARE

இலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியம் என நம்பிக்கை வெளியிட்டுள்ள சீனா இலங்கையால் ஸ்திரதன்மையை  நிலைநாட்ட முடியும் எனவும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவா சனைங் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாரம்பரிய அயல்நாடு என்ற அடிப்படையில் சீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றதுஎன அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இலங்கையால் ஸ்திரதன்மையை  நிலைநாட்ட முடியும், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் என நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
SHARE