Sunday, November 11, 2018

புலமைப்பரிசில் மீள்திருத்தப் பெறுபேறு இம்மாத இறுதியில் வெளியாகும்!

SHARE

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் மீள்திருத்தப் பெறுபேறுகளை இம்மாத இறுதியில் வௌியிட தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த மீள் பரிசீலனைக்காக, தற்போது வரை 35 ஆயிரதிற்கும் அதிகளவிலான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மீள்பரிசீலனை விண்ணப்பங்கள் தொடர்பில் அடுத்த வாரம் முதல் ஆராய்ந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள்திருத்தப் பெறுபேறுகளை இம்மாத இறுதியில் வௌியிட தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்தப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE