Friday, November 30, 2018

மஹிந்த தரப்பால் எந்த தீர்மானத்தையும் நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியாது: சாகல

SHARE

மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பால் எந்வொரு தீர்மானத்தினையும் நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தாலும் அவர்களால் ஏதேனுமொரு பிரேரணையை முன்வைத்து அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியாது.

ஏனெனில் சபாநாயகர் தவிர்ந்த 224 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 122 பெரும்பான்மை எம்மிடம் காணப்படுகின்றது. மீதமுள்ள 102 உறுப்பினர்களைக் கொண்டு அவர்களால் அரசாங்கத்தையும் கொண்டு செல்ல முடியாது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
SHARE