Thursday, November 1, 2018

இன்றும் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

SHARE

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு ,சட்டம் ஒழுங்கு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சுப்பொறுப்புக்களை கொண்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி முன்னிலையில் இன்று மாலை மேலும் இரண்டு அமைச்சர்கள் ஆறு பிரதி அமைச்சர்கள் மற்றும் ஐந்து இராஜாங்க அமைச்சர்களும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

அமைச்சர்கள் ,
1) துமிந்த திசாநாயக்க  -  நீர்ப்பாசனம் நீர்வழங்கல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
2)  தயசிறி ஜயசேகர     -   திறன்விருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர்

பிரதி அமைச்சர்கள் ,

1)  அங்கஜன் இராமநாதன்  -  விவசாய பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2)  இந்திக பண்டார நாயக்க  -  வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்
3)  மனுஷ நாணயக்கார   -   தொழில் மற்றும் வெளிநாட்டுவேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்
4) சாரதி துஷ்மந்த   -   நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்
5) காதர் மஸ்தான்   -  மீள்குடியமர்வு, புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர்

6) நிஷாந்த முத்துஹெட்டி  -  துறைமுகங்கள் மற்றும் துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

 இராஜாங்க அமைச்சர்கள்

1) பியசேன கமகே  -  இளைஞர் ,மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
2)  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா  -  பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
3)  லக்ஸ்மன் செனவிரத்ன  -  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
4)  சிறியானி விஜயவிக்கிரம  -  மாகாண சபைகள் , உள்ளுராட்சி மன்றம் மற்றும் விளையாட்டு துறை இராஜாங்க அமைச்சர்
5)  மொகான் லால் கிரேறு  -  கல்வி மற்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்














SHARE