Friday, November 2, 2018

மஹிந்தவின் நியமனம் இலங்கை தமிழர்களின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தானது – கனடா

SHARE
பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமையானது இலங்கையில் உள்ள தமிழர்களின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தானது என ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியில் கொன்செர்வேர்ட்டிவ் கட்சி உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

நேற்று  (வியாழக்கிழமை) நடைபெற்ற கனேடிய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி போரின் போது போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு காரணமாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ எந்தவொரு நீதியம் இல்லாமல் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரின் நியமனமானது இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான ஒன்று” என விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.
SHARE