Sunday, November 11, 2018

முக்கிய அரச நிறுவனங்களுக்கு விசேட பாதுகாப்பு!

SHARE

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக, ஆறு முக்கிய அரச நிறுவனங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

லேக்ஹவுஸ், தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆகிய ஊடக நிறுவனங்களுக்கும் இதன்போது விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத்தவிர, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் அரச அச்சகம் ஆகிய நிறுவனங்களுக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விசேட பாதுகாப்பு வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு எட்டப்படும் வரை இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
SHARE