Thursday, November 29, 2018

"பெரும்பான்மைக்கு மாத்திரம் செவிசாய்ப்பது ஜனநாயகம் ஆகாது"

SHARE

பெரும்பான்மையைக் கொண்ட தரப்பினரின் கருத்துக்களுக்கு மாத்திரம் செவிசாய்ப்பது ஜனநாயகம் ஆகாது எனத் தெரிவித்த சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சிறுபான்மையை கொண்ட தரப்பினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்களை எடுப்பதே உண்மையான ஜனநாயகம் எனவும் குறிப்பிட்டார்.

யாழில் தமிழ் மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையை கொண்டிருப்பதால் அங்கு சிங்கள மொழி பேசுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. அதேபோன்று அம்பாந்தோட்டையில் சிங்களம் பேசுவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

காலி மாவட்ட செயளகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
SHARE