Thursday, November 15, 2018

ஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க சவால்

SHARE

ஒரே நாளில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சியினர் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுத்துள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டு வெற்றிபெற்று காட்டட்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

இதேவேளை அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதியை சந்தித்து தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
SHARE