Tuesday, November 6, 2018

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஐ.தே.க ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறுகின்றார் நாமல்!

SHARE

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஏற்றுக்கொண்டதாலேயே ஐக்கிய தேசிய கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலை தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவது என்பது சட்டத்திற்கு முரணானது, நாடாளுமன்ற கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர முடியாது.

அவர்கள் பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றார்கள், இந்த நேரத்தில் அவர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருகின்றார்கள் என்றால் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று அர்த்தம்.

ஒரு நேரத்தில் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த அவர்கள் தற்போது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் என்கின்றார்கள்.

இவர்கள் ஊடகங்களுக்கு முன்னால் விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள், அத்துடன் உட்கட்சி பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால்  உட்கட்சி பிரச்சினைகளை தீர்க்க அவர்கள் மக்கள் பணத்தை கொண்டு முயற்சிப்பது வேதனை அளிப்பதாக” அவர் கூறினார்.
SHARE